எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.2,233 கோடியாக குறைந்தது…. பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்ட் அறிவிப்பு

எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.2,233 கோடியாக குறைந்தது…. பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்ட் அறிவிப்பு

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஒன்றும், அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,233 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 22 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,862 கோடி ஈட்டியிருந்தது.

எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.2,233 கோடியாக குறைந்தது…. பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்ட் அறிவிப்பு

2020 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் பெறப்பட்ட டிவிடெண்ட் வருவாய் மற்றும் முதலீட்டு விற்பனை வாயிலான லாபமும் குறைந்ததே நிகர லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணம் என தகவல். அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் பெறப்பட்ட டிவிடெண்ட் வருவாய் ரூ.537 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகவும், முதலீட்டு விற்பனை வாயிலான லாபம் ரூ.321 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகவும் குறைந்துள்ளது.

எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.2,233 கோடியாக குறைந்தது…. பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்ட் அறிவிப்பு

கடந்த மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் வட்டி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.3,780 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.3,238 கோடியாக இருந்தது. எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2019-20ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்ட் அறிவித்துள்ளது.