அமேசானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. கர்நாடக அரசை வலியுறுத்தும் எச்.டி. குமாரசாமி

 

அமேசானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. கர்நாடக அரசை வலியுறுத்தும் எச்.டி. குமாரசாமி

பிகினி ஆடை விவகாரத்தில், கர்நாடக அரசு அமேசானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று எச்.டி. குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் கனடா நாட்டு பிரிவு கர்நாடக அரசின் கொடி வண்ணம் மற்றும் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்ட பிகினி ஆடைகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, கர்நாடக மக்களின் கோபத்தையும் கிளறியுள்ளது.

அமேசானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. கர்நாடக அரசை வலியுறுத்தும் எச்.டி. குமாரசாமி
அமேசான்

கர்நாடாக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான எச்.டி. குமாரசாமி டிவிட்டரில், கர்நாடக அரசு அமேசானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான செயல்களை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றன. கனடா நிறுவனமான இருப்பதால் அவர்கள் மக்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கட்டுப்பட வேண்டும்.

அமேசானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. கர்நாடக அரசை வலியுறுத்தும் எச்.டி. குமாரசாமி
அமேசான் விற்பனை செய்யும் பிகினி ஆடை

கூகுள் இதே போன்று தவறு செய்த பின்னர் மன்னிப்பு கோரியது. இப்போது அமேசானின் முறை. கர்நாடக அரசு அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அமேசானின் தயாரிப்புகள் (பிகினி டிரஸ்) பொருத்தமற்றது மற்றும் அருவருப்பானது என்று பதிவு செய்துள்ளார்.