வரலாற்றை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது… புதிய வரலாற்றை உருவாக்க மம்தா தயாராக உள்ளார். . எச்.டி.குமாரசாமி

வரலாற்றை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது… புதிய வரலாற்றை உருவாக்க மம்தா தயாராக உள்ளார். . எச்.டி.குமாரசாமி

வரலாற்றை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது, புதிய வரலாற்றை உருவாக்க மம்தா தயாராக உள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனநாயக கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி தனது டிவிட்டர் கணக்கில் தொடர்ச்சியா டிவிட்டுகளில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பபானிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர் ராஜீவ் பானர்ஜி கூறியதில் ஆச்சரியமில்லை, இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

வரலாற்றை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது… புதிய வரலாற்றை உருவாக்க மம்தா தயாராக உள்ளார். . எச்.டி.குமாரசாமி
மம்தா பானர்ஜி

இடைத்தேர்தலில் பா.ஜ.க. தனது வேட்பாளரை நிறுத்துவதை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் (ராஜீவ் பானர்ஜி) பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதில் உண்மை உள்ளது. ஏனென்றால் மம்தா பானர்ஜி ஒரு தலைவர் மட்டுமல்ல, வங்காளிகளின் உண்மையான துடிப்பு மற்றும் இதய துடிப்பு. வரலாற்றை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையில், மம்தா பானர்ஜி ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் 214 இடங்களை வென்று வரலாற்றை எழுதினார். இப்போது அவர் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க தயாராக உள்ளார்.

வரலாற்றை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது… புதிய வரலாற்றை உருவாக்க மம்தா தயாராக உள்ளார். . எச்.டி.குமாரசாமி
பா.ஜ.க.

இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக எந்த ஒரு வேட்பாளரையம் நிறுத்தாமல், அவரை தேர்ந்தெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைத்திருக்க வேண்டும். மேற்கு வங்க மக்கள் ஏற்கனவே அவருக்கு (மம்தா பானர்ஜி) தெளிவான மற்றும் தீர்க்கமான ஆணையை வழங்கியுள்ளனர். பா.ஜ.க. தனது குறுகிய மனப்பான்மையிலிருந்து விலகி பெரிய மனதுடன் வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனென்றால், ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவை விட பெரியது எதுவுமில்லை என்று பதிவு செய்து இருந்தார்.