20 நாள் லாக்டவுன் போடுங்க… இல்லைன்னா பெங்களூரு மற்றொரு பிரேசிலாக மாறும்.. எச்சரிக்கும் எச்.டி. குமாரசாமி

20 நாள் லாக்டவுன் போடுங்க… இல்லைன்னா பெங்களூரு மற்றொரு பிரேசிலாக மாறும்.. எச்சரிக்கும் எச்.டி. குமாரசாமி

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு கடந்த வார இறுதியில் புதிதாக 196 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலையிட்டு லாக்டவுன் நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டார்.

20 நாள் லாக்டவுன் போடுங்க… இல்லைன்னா பெங்களூரு மற்றொரு பிரேசிலாக மாறும்.. எச்சரிக்கும் எச்.டி. குமாரசாமி

பெங்களூருவில் சில பகுதிகளில் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அந்நகரம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமராசாமி, பெங்களூருவில் 20 நாள் லாக்டவுனை அமல்படுத்துங்க, இல்லைன்னா பெங்களூரு மற்றொரு பிரேசிலாக மாறும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

20 நாள் லாக்டவுன் போடுங்க… இல்லைன்னா பெங்களூரு மற்றொரு பிரேசிலாக மாறும்.. எச்சரிக்கும் எச்.டி. குமாரசாமி

குமாராசாமி டிவிட்டரில், மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்துங்க. சில பகுதிகளில் மட்டும் லாக்டவுனை செயல்படுத்துவது பயன் அளிக்காது. குறைந்தபட்சம் 20 நாட்களாவது பெங்களூரு பொதுமுடக்கத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் பெங்களூரு மற்றொரு பிரேசிலாக மாறும். மக்களின் சுகாதார விவகாரம், பொருளாதாரம் அல்ல. ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ரேஷன் விநியோகிப்பதால் பிரச்சினை தீரபோவதில்லை. மாநிலத்தின் 50 லட்சம் தொழிலாளர் வர்த்தகத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் பல ஓட்டுநர்கள், நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநில அரசு அறிவித்த திட்டங்களின் பலன்களை பெறவில்லை. நிவாரண தொகுப்பை அறிவிப்பதும், ஏழைகளை சென்றடையாததும் நியாயமற்றது எனவே திட்டங்களை அமல்படுத்துவது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.