கர்நாடகாவில் பசுக்களுக்கு பரவும் கால், வாய் நோய்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாடிய எச்.டி.குமாரசாமி

 

கர்நாடகாவில் பசுக்களுக்கு பரவும் கால், வாய் நோய்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாடிய எச்.டி.குமாரசாமி

கர்நாடகாவில் பசுக்களுக்கு பரவும் கால் மற்றும் வாய் நோயை கையாளுவதில் பா.ஜ.க. அரசு சரியாக செயல்படவில்லை என்று எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மனிதர்களை கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வரும் வேளையில், தற்போது கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு கால் மற்றும் வாய் நோய் (எப்.எம்.டி.) பரவி வருகிறது. இது விவசாய சமுதாயத்தினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கால் மற்றும் வாய் நோய் பரவலை கையாளும் விதம் தொடர்பாக கர்நாடக பா.ஜ.க. அரசை எச்.டி. குமாரசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், மாநிலத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் பரவுவது விவசாய சமூகத்தின் கவலைக்குரிய விஷயமாகும். இந்த நோய் உள்ள மாவட்டங்களில் நாமநகராவும் ஒன்று என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் பசுக்களுக்கு பரவும் கால், வாய் நோய்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாடிய எச்.டி.குமாரசாமி
நோயால் பாதிக்கப்பட்ட பசு

எப்.எம்.டி. ஒரு கடுமையான நோயாகும். ஏனெனில் இது கால்நடைகளுக்கு ஆபத்தானது. மேலும் இது பால் உற்பத்தி, கருவுறுதல் மற்றும் கால்நடைகளுக்கு நாள்பட்ட சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இது ஏழை விவசாயிகளின் நிதி நிலையை மேலும் மோசமாக்கும். பால் கொள்முதல் விலை குறைப்பு, கால்நடை தீவன செலவு அதிகரிப்பால் பால் விவசாயிகள் ஏற்கனவே கஷ்டமான நிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் எப்.எம்.டி. நோய் பரவுவது பால் விவசாயத்தை நஷ்ட தொழிலாக மாற்றக்கூடும் அபாயம் உள்ளது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கால்நடை வளர்ப்பை பெரிதும் நம்பியுள்ளதால் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படாவிட்டால் இது முழு கிராமப்புற பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும்.

கர்நாடகாவில் பசுக்களுக்கு பரவும் கால், வாய் நோய்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாடிய எச்.டி.குமாரசாமி
பா.ஜ.க.

தனியார் மருந்து கடைகளில் கூட எப்.எம்.டி.க்கு தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதால் விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். தடுப்பூசிகள் வழங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பசு வதை எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டிய பா.ஜ.க. அரசு, எப்.எம்.டி.யை கையாள்வதில் அதே போன்ற உற்சாகத்தையும், அர்ப்பணிப்பையும் காட்டவில்லை என்று தெரிகிறது. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் எங்கே? அவர் எப்.எம்.டி. தொடர்பாக ஏதேனும் கூட்டங்களை நடத்தினாரா? எப்.எம்.டி. நோய் பரவுவோமோ என்ற அச்சத்தில் பால் விவசாயிகள் உள்ளனர் ஆனால் இது குறித்து இன்னும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்.