ராமர் கோயிலுக்கு ஏன் நன்கொடை கொடுக்கவில்லை என்று என்னை மிரட்டுறாங்க… எச்.டி. குமாரசாமி

ராமர் கோயிலுக்கு ஏன் நன்கொடை கொடுக்கவில்லை என்று என்னை மிரட்டுறாங்க… எச்.டி. குமாரசாமி

பெண் உள்பட 3 பேர் ராமர் கோயிலுக்கு ஏன் நன்கொடை கொடுக்கவில்லை என்று என்னை மிரட்டுறாங்க என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி கடந்த திங்கட்கிழமையன்று டிவிட்டரில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக நிதி திரட்டுபவர்கள், நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளில் அடையாள குறியீடு செய்வதாகவும், இது ஜெர்மனியில் நாசிக்கள் செய்ததை போன்றது என்று குற்றம் சாட்டி இருந்தார்.

ராமர் கோயிலுக்கு ஏன் நன்கொடை கொடுக்கவில்லை என்று என்னை மிரட்டுறாங்க… எச்.டி. குமாரசாமி
விஷ்வ இந்து பரிஷத்

இந்த சூழ்நிலையில், பெண் உள்பட 3 பேர் என் வீட்டுக்கு வந்து ராமர் கோயிலுக்கு ஏன் நன்கொடை கொடுக்கவில்லை என்று தன்னை மிரட்டியதாக எச்.டி. குமாரசாமி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக எச்.டி. குமாரசாமி கூறியதாவது: யார் தகவல் தருகிறார்கள்? வெளிப்படைத்தன்மை எங்கே? பல தெரு மக்கள் பலரை மிரட்டி நன்கொடைகளை சேகரித்து வருகின்றனர்.

ராமர் கோயிலுக்கு ஏன் நன்கொடை கொடுக்கவில்லை என்று என்னை மிரட்டுறாங்க… எச்.டி. குமாரசாமி
ராமர் கோயில் (மாதிரி படம்)

அப்படி பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஒரு பெண் உள்பட 3 பேர் என் வீட்டுக்கு வந்து, அவர்கள் என்னை மிரட்டி, நீங்கள் ஏன் ராமர் கோயிலுக்கு நிதி கொடுக்கவில்லை என்று கேட்டார்கள். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒரு பிரபலமான கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் வீட்டுக்குள் சென்று அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டிய சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.