நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது… பா.ஜ.க., காங்கிரசுக்கு தேவகவுடா அட்வைஸ்…

நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது… பா.ஜ.க., காங்கிரசுக்கு தேவகவுடா அட்வைஸ்…

நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது. இரு தேசிய கட்சிகளும் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கும், விவசாய துறையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு புரிதலுக்கு வர வேண்டும் என தேவகவுடா அறிவுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான எச்.டி. தேவுகவுடா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது. இரு தேசிய கட்சிகளும் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கும், விவசாய துறையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.

நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது… பா.ஜ.க., காங்கிரசுக்கு தேவகவுடா அட்வைஸ்…
எச்.டி. தேவகவுடா

விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், அரசு மற்றும் விவசாய சந்தைகளுடான பல்வேறு தொடர்புகளின் காரணமாக எழும் மோதல்களை தீர்ப்பதற்கும் ஒரு நிரந்தர தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். கமிஷன் அமைப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன். அதை அவருடன் தனிப்பட்ட முறையில் பின்பற்றுவேன். பிரதமர் வேளாண் மசோதாக்களை அமல்படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது ஏனென்றால் அதில் பரவலான விரும்பதகாதவை உள்ளன.

நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது… பா.ஜ.க., காங்கிரசுக்கு தேவகவுடா அட்வைஸ்…
பிரதமர் மோடி

பிரதமர் நினைப்பது போல் இந்த மசோதா இடைத்தரகர்களை அகற்றாது உண்மையில் அது அதிக இடைத்தரகர்களை உருவாக்கும். பிரதமரின் அமைச்சரவையிலிருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்து இருப்பது சாதரண விவசாயி காணும் பிரச்சினையின் அளவை குறிக்கிறது. விவசாய பின்னணியில் இருந்து வந்திருப்பதால், இந்த மசோதாக்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பது எனது உணர்வு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.