கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..

கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..

2020 செப்டம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.3,142 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவைகள் நிறுவனங்களில் ஒன்றாக எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.3,046 கோடி அளவுக்கே இருக்கும் என வர்த்தக செய்தி நிறுவனம் ஒன்று கணித்து இருந்தது. ஆனால் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் அதனை காட்டிலும் அதிகரித்துள்ளது.

கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.3,142 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டைக் காட்டிலும் 7.3 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,925 கோடியாக இருந்தது.

கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 4.2 சதவீதம் அதிகரித்து ரூ.18,594 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.17,841 கோடியாக இருந்தது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.4 அறிவித்துள்ளது.