மகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் … ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்..

மகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் … ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்..

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. 2020 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,925 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31.7 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிகர லாபமாக ரூ.2,220 கோடி சம்பாதித்து இருந்தது.

மகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் … ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்..

2020 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 8.6 சதவீதம் அதிகரித்து ரூ.17,841 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் இறுதி நிலவரப்படி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

மகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் … ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்..

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் அந்த பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குனரும், ஷிவ் நாடாரின் மகளுமான ரோஷிணி நாடார் மல்ஹோத்ராவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை திட்ட அதிகாரி ஆகிய பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.