எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் லாபம் ரூ.2,962 கோடி… பணியாளர்களுக்கு ஒரு முறை போனஸாக ரூ.700 கோடி அறிவிப்பு

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் லாபம் ரூ.2,962 கோடி… பணியாளர்களுக்கு ஒரு முறை போனஸாக ரூ.700 கோடி அறிவிப்பு

2021 மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,962 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இந்தியாவின் 3வது பெரிய சாப்ட்வேர் சேவைகள் வழங்கும் நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,962 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 25.6 சதவீதம் குறைவாகும். 2020 டிசம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,982 கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் லாபம் ரூ.2,962 கோடி… பணியாளர்களுக்கு ஒரு முறை போனஸாக ரூ.700 கோடி அறிவிப்பு
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.19,642 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 1.8 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.19,302 கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் லாபம் ரூ.2,962 கோடி… பணியாளர்களுக்கு ஒரு முறை போனஸாக ரூ.700 கோடி அறிவிப்பு
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

2020-21ம் நிதியாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் லாபமாக ரூ.13,011 கோடி ஈட்டியுள்ளது. மேலும் வருவாயாக ரூ.75,379 கோடி ஈட்டியுள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 1,000 கோடி டாலர் வருவாய் மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் பணியாளர்களுக்கு ஒரு முறை போனசாக மொத்தம் சுமார் ரூ.700 கோடி அறிவித்துள்ளது.