“வேற லெவலில் வேலை செய்தால் பென்ஸ் கார் பரிசு” – ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

 

“வேற லெவலில் வேலை செய்தால் பென்ஸ் கார் பரிசு” – ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

ஊழியர்களைச் சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டால் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து சிறந்த அவுட்புட்டை கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும்போது ஊழியர்களுடன் சேர்ந்து தொழில் நிறுவனங்களும் வளரும். இதுதான் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களின் தாரக மந்திரம். சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களைக் கவனித்துக் கொள்வதில் பெரும் சிரத்தை கொள்ளும். அந்த வகையில் ஷிவ் நாடார் உருவாக்கிய ஹெச்சிஎல் நிறுவனம் எப்போதுமே ஊழியர் நட்பு பாராட்டுவதில் சிறந்த நிறுவனம்.

“வேற லெவலில் வேலை செய்தால் பென்ஸ் கார் பரிசு” – ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

தற்போது தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது சிறப்பாக பர்ஃபார்மன்ஸ் செய்யும் டாப் கிளாஸ் ஊழியர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென்ஸ் கார் பரிசு திட்டம் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதில்லை. 2013ஆம் ஆண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இதை கைவிட்டது.

“வேற லெவலில் வேலை செய்தால் பென்ஸ் கார் பரிசு” – ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

சமீபத்தில்தான் ஷிவ் நாடார் எம்டி பொறுப்பிலிருந்து விலகினார். அவரது மகள் ரோஷினி நாடார் கைகளுக்கு நிர்வாகம் சென்றுள்ளது. தற்போது அவர் கார் பரிசு வழங்கும் திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார். இதுகுறித்து நிறுவனத்தின் மனிதவள (HR) பிரிவு தலைவர் விவி அப்பாராவ் கூறுகையில், “ஊழியர்களுக்கான சிறப்புப் பரிசு மற்றும் ஊக்கத் தொகை குறித்த முடிவுகளும், திட்டத்தையும் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

“வேற லெவலில் வேலை செய்தால் பென்ஸ் கார் பரிசு” – ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

பொதுவாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் இடத்தில் புதிய ஊழியர்களை நியமிக்கும்போது 15 முதல் 20 சதவீதம் கூடுதல் தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு ஜாவா டெவலப்பர் தேவை என்றால் அதே சம்பளத்தில் புதிய ஊழியர்களை எடுக்க முடியும், அதுவே கிளவுட், பிக் டேட்டா போன்ற முக்கியத் தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களைப் பணியில் அமர்த்த கூடுதலான தொகையை நாம் கொடுத்தே ஆக வேண்டும். இதன் காரணமாகவே ஊழியர்களைத் தக்கவைக்க இம்மாதிரியான பரிசு திட்டங்கள் அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.