ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வுபெற்றார்!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வுபெற்றார்!

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இன்று பணி ஓய்வுபெற்றார். கர்நாடக மாநில பார் கவுன்சில் உறுப்பினர்களும் பெங்களூரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டவர்களும் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வுபெற்றார்!

இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியதாக நினைவுகூர்ந்த அவர்கள், எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக குன்ஹா சிறப்பாகப் பணியாற்றியதாகப் பாராட்டினார்கள். மங்களூரைச் சேர்ந்த குன்ஹா 1985ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 2002ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியான அவர், பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார். இந்தக் காலக்கட்டத்தில் தான் குன்ஹா ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்திருந்தார். 2016ஆம் ஆண்டு பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதியானார். தற்போது ஓய்வுபெற்றுள்ளார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வுபெற்றார்!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வுபெற்றார்!

1991-1996 காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தனிநீபதியாக நீதிபதி குன்ஹா நியமிக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டு முதல் இவ்வழக்கை விசாரித்துவந்த குன்ஹா, 18 ஆண்டுக்குப் பிறகு, 2014ஆம் ஆண்டு அதிரடி தீர்ப்பளித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் குறிப்பிட்ட குன்ஹா, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை ஜெயலலிதா மறைவுக்குப் பின் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைவாசம் அனுபவித்தனர். சசிகலா, இளவரசி விடுதலையான நிலையில், சுதாகரனுக்கு தண்டனைக் காலம் இன்னும் முடிவடையவில்லை.