ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கு… தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கு… தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தாழ்த்தப்பட்டோர் தொடர்பாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்தி தி.மு.க கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டோர் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர். அவருக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கு… தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர போலீஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. எந்த நிபந்தனையும் இன்றி ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா வைரஸை காரணம் காட்டி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்மீதான குற்றச்சாட்டை ஆர்.எஸ்.பாரதி மறுப்பதால் குரல் பரிசோதனை நடத்த வேண்டும் எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கு… தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புதீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது சென்னை போலீஸ் இதில் கவனம் செலுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மக்கள் மத்தியில் நீதித்துறை தொடர்பாக தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும், இதுபோன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் அதிருப்தியை வெளியிட்டார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.