• March
    31
    Tuesday

Main Area

Main



முரசொலி விவகாரம்... டாக்டர் ராமதாஸ் கோரிக்கையை ஏற்று விலக்களித்த உயர் நீதிமன்றம்!

ramadoss
ramadoss

முரசொலி நிலம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டதாக டாக்டர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான ஆவணங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டபோது மூல பத்திரத்தைக் காட்ட வேண்டும் என்று பிரச்னையை திசை திருப்பினார் ராமதாஸ். ராமதாஸின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

murasoli-building


இந்த நிலையில், ராமதாஸ் தான் வெளியிட்ட தகவலுக்கு ஆதாரத்தை அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். மன்னிப்பு கேட்காத நிலையில் ராமதாஸ் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (மார்ச் 20) நடைபெற இருந்த விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று ராமதாசுக்கு உத்தரவிடப்பட்டது.

rs-bharathi-09.jpg


இதை எதிர்த்து ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், டாக்டர் ராமதாஸ் வழக்கு விசாரணையில் ஆஜராக விலக்களித்தும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார். மேலும் வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.