Home சினிமா அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva

அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva

மின்சார கனவு மற்றும் லக்சயா ஆகிய படங்களின் நடன அமைப்புக்காக தேசிய விருது பெற்றார். கால் நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி மக்களை மகிழ்விக்கும் இந்த கலைஞனுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசாங்கம். இந்திய திரை ஆளுமைகள் பலரையும் ஆட்டுவித்தவர் பிரபுதேவா.

அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva

நடனம் ஆடுபவர்களை மனசுல மைக்கேல் ஜாக்ஸன்னு நினைப்பு என்று கூறுவது, மனசுல என்ன பிரபு தேவானு நினைப்பா என்று மாறியதுதான் பிரபு தேவாவின் வளர்ச்சி. நடனத்துறையில் இந்திய அளவில் மிகப்பெரிய ஆளுமை பிரபுதேவா, நடனம் மட்டுமல்லாமல் நடிப்பு, இயக்கம் என பல துறைகளிலும் ஒரு கைபார்த்துவிட்டு கூலாக இருக்கிறார் மாஸ்டர் பிரபுதேவா.

இந்து

1994-ஆம் ஆண்டு இந்து படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபு தேவா. டைட்டில் கார்டில் அறிமுகம் ‘இந்திய மைக்கேல் ஜாக்ஸன்’ பிரபு தேவா என்று போடப்படுகிறது. கதாநாயகன் ஆகும் முன்பே பிரபு தேவா பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இதயம் படத்தில் இடம்பெற்ற ‘ஏப்ரல் மேயிலே’, சூரியன் படத்தில் வரும் ‘லாலாக்கு டோல்டப்பிமா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களில் தோன்றி தமிழ் சினிமா ரசிகர்களை தன் நடனத்தின் மூலம் வசீகரித்தார்.

பிரபுதேவா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தை மாற்றி அமைத்தது. பிரபு தேவாவை நம்பி பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கலாம் என பல தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளித்த படம் அது. காதலன் படத்தில் இடம்பெற்ற ‘ஊர்வசி ஊர்வசி’, ‘முக்காலா முக்காபுலா’, ‘பேட்டாராப்’ பாடல்கள் இன்றளவும் இளைஞர்கள் பிளே லிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடலாகும். அதன்பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். 

mukkala mukkabula

தொடர்ந்து தமிழில் நடித்து வந்த பிரபு தேவா 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்துக்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. அந்த கேப்பில் இயக்குனராக மாறியிருந்தார். 2005-ஆம் ஆண்டு தெலுங்கில் அவர் இயக்கிய ‘Nuvvostanante Nenoddantana’ படம் வெளியாகி செம ஹிட்டானது. இந்த படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் ராஜா. ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடித்து இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட்.  2013-ஆம் ஆண்டு இதே கதையை இந்தியில் ‘Ramaiya Vastavaiya’ என்ற பெயரில் இயக்கினார் பிரபு தேவா.

something

ஏன் ஒரே கதையை மீண்டும் மீண்டும் இயக்குகிறீர்கள் என பிரபு தேவா இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை என்றார் பிரபு தேவா.

2004-ஆம் ஆண்டுக்கு பிறகு பிரபு தேவா என்ற நல்ல நடிகனை தமிழ் சினிமாவில் காணவில்லை என வருத்தப்பட்ட கூட்டமும் இங்குண்டு. அந்த வருத்தத்தை போக்க 11 ஆண்டுகள் ஆனது. 2016-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தேவி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் பிரபு தேவா.

prabhudeva

அதன்பிறகு மெர்குரி, சார்லி சாப்லின் 2 என தொடர்ந்து நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘குலேபகாவலி’ படத்தில் இடம்பெற்ற குலேபா பாடலும் அவர் நடனத்தால் வைரலானது. 

guleba

மின்சார கனவு மற்றும் லக்சயா ஆகிய படங்களின் நடன அமைப்புக்காக தேசிய விருது பெற்றார். கால் நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி மக்களை மகிழ்விக்கும் இந்த கலைஞனுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசாங்கம். இந்திய திரை ஆளுமைகள் பலரையும் ஆட்டுவித்தவர் பிரபுதேவா.

minsara kanavu

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர்கள் பலரும் பிரபு தேவாவின் ஸ்டூடண்டாக இருந்தவர்கள். நடனத்துறையை தேர்ந்தெடுக்கும் இளைஞர்களுக்கு என்றென்றும் ரோல்மாடலாக திகழும் பிரபு தேவாவுக்காக வாலி எழுதிய வரிகள் ‘அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்’. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபு தேவா, உங்கள் திரைப்பயணம் தொடரட்டும்.

இதையும் படிங்க: சந்திரகுமாரி சீரியலில் இருந்து விலகிய ராதிகா? இனி அவருக்கு பதில் இவர் தான்!

அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வார...

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும் – தெய்வத் தமிழ்ப் பேரவை -செயற்குழு கூட்ட தீர்மானம்

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, இறைநெறி இமயவன் தலைமை...

ராஜேந்திர பாலாஜியின் பழைய ஃபைல்கள்… அனுமதி கொடுத்த ஹைகோர்ட் – பீஸ்ட் மோடில் திமுக அரசு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரைவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த...
- Advertisment -
TopTamilNews