3 முறை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தவர்.. மன்னர் வாரிசிடம் சிக்கி தவிக்கும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

3 முறை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தவர்.. மன்னர் வாரிசிடம் சிக்கி தவிக்கும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார். 2005 முதல் 2018 வரை நடைபெற்ற 3 சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால் சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியில் இருந்து தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குறைந்த இடங்கள் வெற்றி வித்தியாசத்தில் காங்கிரசிடம் பா.ஜ.க. ஆட்சியை பறிகொடுத்தது.

3 முறை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தவர்.. மன்னர் வாரிசிடம் சிக்கி தவிக்கும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சுமார் 15 மாதங்கள் கடந்த நிலையில் உட்கட்சி பூசலால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து தனது ஆதரவு எம்.எம்.ஏ.க்களுடன் வெளியேறி பா.ஜ.க.வில் ஐக்கியமானார். ஜோதிராதித்ய சிந்தியாவின் தாத்தா ஜிவாஜிராவ் சிந்தியா குவாலியரின் கடைசி மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் பரம்பரை என்பதால் சிந்தியாவின் குடும்பத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பும், செல்வாக்கும் உண்டு.

3 முறை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தவர்.. மன்னர் வாரிசிடம் சிக்கி தவிக்கும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

ஜோதிராதித்ய சிந்தியாவின் எதிர்பாராத நடவடிக்கையால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சி அமைக்க உதவியதால் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ஜ.க. வழங்கியது. மேலும், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அண்மையில் தனது அமைச்சரவை 2வது முறையாக விரிவாக்கம் செய்தார். அப்போது மொத்தம் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் சிந்தியா ஆதரவாளர்கள் 12 பேரும் அடங்குவர். இதுவரை சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. மேலும் கடந்த சில முன் டெல்லி செல்வதற்கு முன் அங்கியிருந்து வந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.

3 முறை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தவர்.. மன்னர் வாரிசிடம் சிக்கி தவிக்கும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

ஆனால் டெல்லியிலிருந்து வந்த பிறகு சிவ்ராஜ் சிங் சவுகான் சொன்னப்படி புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யவில்லை. துறைகள் ஒதுக்கீடு செய்வதற்கு இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்று மழுப்பலாக தெரிவித்து விட்டார். ஆனால் அதன் பின்னணியில் ஜோதிராதித்ய சிந்தியா இருப்பதாக புது தகவல் வந்துள்ளது. துறைகள் ஒதுக்கீட்டில் சிந்தியா அதிகம் பேரம் பேசுவதாக அதாவது தனது ஆதரவாளர்களுக்கு இந்த துறைகள்தான் கொடுக்க வேண்டும் என என்கிறார் அதனால்தான் புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தாமதமாகி வருகிறது என செய்தி. ஆக, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு இந்த முறை பழைய மாதிரி ஆட்சியை நடத்துவது எளிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.