உங்களுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளதா? ஏழுமலையான் பிரசாதம் வீடு தேடி வரும்!

உங்களுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளதா? ஏழுமலையான் பிரசாதம் வீடு தேடி வரும்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பார்க்க பார்க்க சலிக்காத ஓர் இடம். அமைதியான சூழல், எழில் கொஞ்சும் இயற்கை நடுவே, பொலிவுடன் வீற்றிருக்கும் பெருமாளை காண பக்தகோடிகள் லட்சக்கணக்கானோர் காத்துக் கிடக்கும் ஒரு புண்ணிய தலம்.

உங்களுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளதா? ஏழுமலையான் பிரசாதம் வீடு தேடி வரும்!

வாழ்க்கையில் ஒருமுறையாவது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் பெரும்பாலானோர் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகளை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக அழைத்துச் செல்வர். ஆனால் ஏழுமலையான் அருள் திருமணத்திற்கு முன்பாகவே உங்களுக்கு கிடைக்கும் ஒரு அற்புத வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

உங்களுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளதா? ஏழுமலையான் பிரசாதம் வீடு தேடி வரும்!

உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கோ திருமண நிச்சயம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் உங்கள் திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்பாக திருப்பதி தேவஸ்தானம் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறு நீங்கள் அனுப்பி வைக்கும் பட்சத்தில் மணமக்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஏழுமலையானின் பிரசாதம் மற்றும் மங்கலப்பொருட்கள் பெருமாளின் ஆசிர்வாதத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

உங்களுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளதா? ஏழுமலையான் பிரசாதம் வீடு தேடி வரும்!

தம்பதிகள் கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம் , குங்குமம் , மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைப்பதுடன் , ஏழுமலையானின் அற்புதங்களைக் கூறும் புத்தகம் ஒன்றையும் அனுப்பி வைக்கிறது. இந்த நடைமுறை எம்பெருமானுக்கு நமது திருமண அழைப்பிதழை சமர்ப்பித்த மாதிரியும் இருக்கும், அதே மாதிரி அவரின் பூரண ஆசியுடன் திருமணம் நடைபெறுவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.