அவன் ஒரு கொடூரன்… இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காத ரவுடி விகாஸ் துபேவின் தாய்!

 

அவன் ஒரு கொடூரன்… இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காத ரவுடி விகாஸ் துபேவின் தாய்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவல்துறையினரை சுட்டுக்கொன்று விட்டு தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே நேற்றைய தினம் உத்தரபிரதேச காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் கான்பூரில் உள்ள பைரவ்காட் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்த சடங்கில் விகாஸ் துபேவின் தாய் தந்தை தங்கை தம்பி என யாரும் கலந்து கொள்ளவில்லை. அவரது இறுதிச் சடங்கில் அவரது மனைவி ரிச்சா மற்றும் இளைய மகன் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மைத்துனர் தினேஷ் திவாரி மட்டும் இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொண்டுள்ளார். இவர்கள் அனைவருமே விகாஸ் துபேவின் சட்டவிரோத செயல்களுக்கு துணை புரிந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

அவன் ஒரு கொடூரன்… இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காத ரவுடி விகாஸ் துபேவின் தாய்!

விகாஸ் துபேவின் தாயார் சரளாதேவி லக்னோவில் தனது இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எட்டு காவல்துறையினரை சுட்டுக் கொன்றுவிட்டார் என தெரிந்தவுடன் தன்னையும் காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என அஞ்சி இளைய மகன் தீபக் தலைமறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விகாஸ் துபேவின் மரண செய்தியை அவரது தாயார் சரளாதேவி இடம் காவல்துறையினர் தெரிவித்தவுடன் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு அவர் தனது மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக கான்பூர் செல்ல போவதுல்லை என தெரிவித்துள்ளார்.

அவன் ஒரு கொடூரன்… இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காத ரவுடி விகாஸ் துபேவின் தாய்!

என் மகனின் செயல்பாடுகளுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, எட்டு காவல்துறையினரை தன் மகன் சுட்டுக் கொன்றான் என்ற தகவல் கேள்விப்பட்டவுடன் என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. இப்படி பட்டவனை காவல்துறையினர் பிடித்தாலும் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும் என நினைத்ததாக அவர் கூறினார். இறுதிச் சடங்குகளில் பங்கேற்குமாறு காவல் துறையினர் சார்பில் விகாஸ் துபே வின் தாய், தந்தை, தங்கை உள்ளிட்ட மற்ற குடும்பத்தாருக்கு கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.