darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



ஓட்டல் உணவில் புழுக்கள்: பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

நடிகை நிலா
நடிகை நிலா

அகமதாபாத்: நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக நடிகை நிலா  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

NILA

தமிழில் அன்பே ஆருயிரே, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா. இவர் சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலில்  தங்கியுள்ளார். அங்குக் கொடுக்கப்பட்ட   உணவில் புழுக்கள் இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

 

இந்நிலையில்  மீரா சோப்ரா இதுகுறித்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'நான் அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளேன். அங்கு ரூம் சர்வீஸ் மூலம் உணவு வாங்கினேன். ஆனால்  அந்த உணவில் புழுக்கள் உள்ளது. இதைச் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. பெரிய நட்சத்திர ஹோட்டல் என்பதால் அதிக வாடகை  கொடுத்து  இங்குத் தங்குகிறோம். ஆனால், அவர்கள் புழுக்களைக் கொண்ட உணவைக் கொடுக்கிறார்கள்.  எனக்குக் கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லை. அதற்கான காரணம் தற்போது தெரிந்துவிட்டது. இதை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.