’அமெரிக்க அதிபர் கொரோனாவிருந்து குணமடைந்துவிட்டாரா?’ தொடரும் சர்ச்சை

 

’அமெரிக்க அதிபர் கொரோனாவிருந்து குணமடைந்துவிட்டாரா?’ தொடரும் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்த வண்ணமே உள்ளன. ஒரு பெண் இவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது சற்று ஓய்ந்ததும் தற்போது கொரோனா சர்ச்சை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர்.

’அமெரிக்க அதிபர் கொரோனாவிருந்து குணமடைந்துவிட்டாரா?’ தொடரும் சர்ச்சை

அதனால், ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குப்பட்டு, வெள்ளை மாளிகை திரும்பினார்.

ஆனால், வெள்ளை மாளிகை திரும்பியபோது மாஸ்க் போடாமல் ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தாகச் சர்ச்சை எழுந்தது.

ட்ரம்ப்க்கு ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசேன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துமனை சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் வழக்கமாக அலுவல் பணிகளைப் பார்ப்பார் என்று செய்திகள் வெளியாகின. கொரோனாவுக்கு மிகக் குறுகிய காலமே சிகிச்சை எடுத்த நிலையில் எப்படி வெளியே சுற்ற முடியும்? என்று கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

’அமெரிக்க அதிபர் கொரோனாவிருந்து குணமடைந்துவிட்டாரா?’ தொடரும் சர்ச்சை

இஸ்ரேல் அரசின் மருத்துவ நல ஆலோசகர் டாக்டர் ரேனி காம்ஸ், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், சிகிச்சையில் இருக்கும்போதே ஆதரவாளர்களைச் சந்திக்க திட்டமிடுவது சரியானது அல்ல. கொரோனா குறித்த தவறான வழிகாட்டலை மக்களுக்கு அளித்துவிடக்கூடும்” என அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், தான் கொரோனா சிகிச்சையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இனி மருந்து எடுத்துக்கொள்ள போவதில்லை’ என்று தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது சிக்கலை இன்னும்பெரிதுபடுத்தும் என்கிறார்.

நவம்பர் 3 -ம் தேதி அமெரிக்காவில் தேர்தல், இந்நேரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.