டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட உரிமை உண்டு – உயர்நீதிமன்றம்

 

டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட உரிமை உண்டு – உயர்நீதிமன்றம்

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு

கருமலைக்கடலில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கியதாக 10 பெண்கள் உட்பட சிலர் மீது போலீஸ் வழக்குப்பதிந்தது.

டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட உரிமை உண்டு – உயர்நீதிமன்றம்

வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். டாஸ்மாக் போராட்டக்காரர்கள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமானத்தை பெருக்க மதுக்கடைகளை அரசு அமைத்தாலும் டாஸ்மாக் மதுக்கடையால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்க உரிமை உண்டு. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 95 இன் கீழ் விதிவிலக்கு அளித்த போராட்டக்காரர்கள் மீதான வழக்கை ரத்து செய்தார்.