தந்தையை 1500 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்ற ஜோதி கொலை செய்யப்பட்டாரா?! அதிர்ச்சித் தகவல்!?

 

தந்தையை 1500 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்ற ஜோதி கொலை செய்யப்பட்டாரா?! அதிர்ச்சித் தகவல்!?

கொரோனா வைரஸ் பரவல் பரவலால் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நீடித்து வருகிறது. வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் திணறி வந்தனர். வடமாநிலங்களில் ஊரடங்கால் உணவிற்கே வழி இல்லாத நிலை ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊரை அடைந்தனர். இந்த சம்பவங்கள் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.

ஜோதிகுமாரி என்ற 15 வயது சிறுமி ஒருவர், காயமடைந்த தனது தந்தையை அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து பத்து நாட்களுக்கு மேலாக 1200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் சொந்த மாநிலமாக பீஹாருக்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் நாடு முழுக்க வைரல் ஆனது.

தந்தையை 1500 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்ற ஜோதி கொலை செய்யப்பட்டாரா?! அதிர்ச்சித் தகவல்!?
சிறுமியின் செயலைப் பாராட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா டிரம்ப் கூட சிறுமியின் மனவலிமையைப் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
தற்போது ஜோதிகுமாரி என்ற அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக தளங்களில் பரவி வருகிறது. மேலும் #JusticeForJyoti என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஒருவர் “இருவரின் பெயர்களும் ஜோதி பஸ்வான் தான். அதனால் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஆனாலும் இந்த ஜோதிக்கு கட்டாயமாக நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
இருவரின் பெயரும் பேரும் ஒரே மாதிரி இருப்பதாலும் இருவரும் ஒரே ஊர் சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த செய்தி பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தற்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அர்ஜுன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.