ஹரியானா காவல் நிலையத்தில் 29 ஆயிரம் லிட்டர் மதுபானம் மாயம்… எலிகள் குடித்து விட்டதாக கூறும் போலீஸ்

ஹரியானா காவல் நிலையத்தில் 29 ஆயிரம் லிட்டர் மதுபானம் மாயம்… எலிகள் குடித்து விட்டதாக கூறும் போலீஸ்

ஹரியானா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த 29 ஆயிரம் லிட்டர் மதுபானம் மாயமானது. எலிகள்தான் அவற்றை குடித்ததாக போலீசார் கூறியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் ஒரு விநோதமான சம்பவம் நடந்துள்ளது. அம்மாநில காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுருந்த பல ஆயிரம் லிட்டர் எலிகள் குடித்து காலி செய்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். ஹரியானாவில் போலீசார் பறிமுதல் செய்யும் மதுபானங்களை காவல் நிலையத்தின் மல்ஹானாவில் அதாவது ஸ்டோர்ரூமில் வைக்கப்படும். மதுபான தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகு அவற்றை அழிக்கப்படுவது வாடிக்கை.

ஹரியானா காவல் நிலையத்தில் 29 ஆயிரம் லிட்டர் மதுபானம் மாயம்… எலிகள் குடித்து விட்டதாக கூறும் போலீஸ்
மதுபானம்

இந்த சூழ்நிலையில், ஹரியானா போலீசார் சுமார் 50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் இங்கிலிஷ் ஒயின் மற்றும் 3 ஆயிரம் கேன் பீர்களை பறிமுதல் செய்து இருந்தனர். இது தொடர்பாக 825 வழக்குகள் பதிவாகி இருந்தது. விசாரணைக்காக வழக்குகள் காத்திருந்தன, பறிமுதல் செய்த மதுபானங்கள் காவல் நிலைய ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அந்த மதுபானங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பே காணாமல் போகி விட்டது.

ஹரியானா காவல் நிலையத்தில் 29 ஆயிரம் லிட்டர் மதுபானம் மாயம்… எலிகள் குடித்து விட்டதாக கூறும் போலீஸ்
காவல் நிலையம்

மதுபானங்கள் வைக்கப்பட்டு இருந்த 30 காவல் நிலையங்களில் 25 காவல் நிலையங்களில் சுமார் 29 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயமாகி விட்டதாக தகவல் வெளியானது. மதுபானங்கள் எப்படி மாயமானது என்ற கேள்விக்கு போலீசார் எலிகளை கை காட்டுகின்றனர். 29 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை எலிகள் குடித்து விட்டதாக அவற்றின் மீது போலீசார் பழிபோடுகின்றனர். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.