பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்… ஹரியானா காங்கிரஸ் தலைவர் பேச்சால் புதிய திருப்பம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்… ஹரியானா காங்கிரஸ் தலைவர் பேச்சால் புதிய திருப்பம்

ஹரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். இதனால் அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி கவிழுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.-ஜன்னாயக் ஜனதா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதால் பா.ஜ.க. கூட்டணி அரசு விவசாயிகளின் கோபத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஹரியானாவில் ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா கூறியிருப்பது பெரும் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்… ஹரியானா காங்கிரஸ் தலைவர் பேச்சால் புதிய திருப்பம்
குமாரி செல்ஜா

ஹரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா கூறுகையில், உண்மையை உணர்ந்த ஆளும் கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்களிடம் பேசினார்கள், தங்களது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்கள். அத்தகைய (ஆட்சி மாற்றம்?) நிலைமை ஏற்படும் போது, அரசியலமைப்பு கோருவதை நாங்கள் செய்வோம் என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்… ஹரியானா காங்கிரஸ் தலைவர் பேச்சால் புதிய திருப்பம்
முதல்வர் மனோகர் லால் கட்டார்

பா.ஜக. எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என்ற குமாரி செல்ஜாவின் கருத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மறுக்கவில்லை. அதேசமயம் எந்த எம்.எல்.ஏ.க்கள் எங்கே, யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். ஆக, ஹரியானாவில் பல பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு தாவ வாய்ப்புள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றமும் நிகழ வாய்ப்புள்ளதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது.