அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள்… பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் வலியுறுத்தல்

 

அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள்… பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் வலியுறுத்தல்

அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அம்மாநில விவசாயிகள் டெல்லி சாலோ என்ற பெயரில் பேரணியாக டெல்லி சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டெல்லிக்கு நோக்கி பேரணியாக சென்றனர். விவசாயிகளின் பேரணியை முன்னிட்டு ஹரியானா எல்லைகளை மூட அம்மாநில அரசுஉத்தரவிட்டிருந்தது. இன்று அம்பாலாவுக்கு பேரணியாக வந்த விவசாயிகள் அங்கு போலீசார் போட்டு இருந்த தடுப்புகளை அகற்றி விட்டு செல்ல முயன்றனர்.

அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள்… பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் வலியுறுத்தல்
மனோகர் லால் கட்டார்

இதனையடுத்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர ஹரியானா போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சூழ்நிலையில் குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் பிரச்சினை இருந்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். ஆகையால் விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிடம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தினார்.

அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள்… பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் வலியுறுத்தல்
கேப்டன் அமரீந்தர் சிங்

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தொடர்ச்சியான டிவிட்டுகளில் பதிவுகளில், உங்கள் பொய்கள், ஏமாற்றுதல் மற்றும் பிரச்சாரத்திற்கான நேரம் முடிந்து விட்டது. உங்கள் உண்மையான முகத்தை மக்கள் பார்க்கட்டும். கொரோனா தொற்றுநோய்களின் காலத்தில் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதை நிறுத்துங்கள். மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். தொற்றுநோய் நேரத்தில் மலிவான அரசியலை தவிர்க்கவும். கேப்டன் அமரீந்தர் ஜி நான் முன்பே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன். குறைந்த பட்ச ஆதரவு விலையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் அரசியலை விட்டு விலகுவேன். எனவே அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து இருந்தார்.