பன்மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு- ஹர்ஷ்வர்தன்

 

பன்மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு- ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமாக தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தை நெருங்கி விட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், மக்களின் அஜாக்கிரதையே கொரோனாவின் இரண்டாம் அலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பன்மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு- ஹர்ஷ்வர்தன்

இந்நிலையில் தமிழகம் உட்பட 11 மாநிலம், யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “கொரோனாவிலிருந்து குணமடைவோரை விட புதிதாக பாதிக்கப்படுவோர் அதிகமாக உள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு 7.6%, உயிரிழப்பு 10.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. மாநிலங்களிடம் 1.58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 1.16 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு தரப்படவுள்ளன” என தெரிவித்தார்.