Home இந்தியா கொரோனா பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

அடுத்த ஒன்றிரண்டு மாதத்திற்குள் கொரோனா பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வோர் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெறும் 7.85 சதவிகிதமாக இருந்த குணமடைந்தோர் விகிதம் தற்போது 64.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு 88 சதவிகிதம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். லடாக்கில் 80 சதவிகிதம் பேரும், ஹரியானாவில் 78 சதவிகிதம் பேரும், அசாமில் 76 சதவிகிதம் பேரும் மீண்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 73 சதவிகிதம் பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து 10.20 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி...

சிறுவனை விழுங்கிய முதலை: வயிற்றை கிழித்து மீட்டனர்

இரண்டு சிறுவர்கள் தங்களின் தந்தையுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எட்டு வயது சிறுவன் திடீரென தண்ணீருக்குள் இழுத்துச்செல்லப்பட்டான். சுழல் வந்து இழுக்கிறது என்று நினைத்த தந்தை, மகனை பிடித்து இழுக்க...

மதவாத, அடிமை சக்திகளை முறியடிப்போம் : மு.க. ஸ்டாலின் உறுதி!!

பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமாக இருந்தவர்...

திமுக பிடியில் வைகோ : தனித்துவத்தை இழந்தது ஏன் ?

மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என வைகோ விளக்கம் அளித்துள்ளார். திமுகவில் இருந்து பிரிந்த...
TopTamilNews