4 மாத லாக்டவுன் 78 ஆயிரம் உயிர் இழப்புகளை தடுத்துள்ளது…. மக்களவையில் ஹர்ஷ் வர்தன் தகவல்

 

4 மாத லாக்டவுன் 78 ஆயிரம் உயிர் இழப்புகளை தடுத்துள்ளது…. மக்களவையில் ஹர்ஷ் வர்தன் தகவல்

4 மாத கால லாக்டவுனால் கோவிட்-19 காரணமாக 78 ஆயிரம் உயிர் இழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புகளை இடையே நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று மக்களவையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கோவிட்-19 நிர்வாகம் தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த நான்கு மாதங்கள் கூடுதல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மனித வளத்தை மேம்படுத்துவதற்கும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 மாஸ்க்குகள், வெண்டிலேட்டர்கள் போன்ற முக்கியமான கருவிகளை உள்நாட்டில் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

4 மாத லாக்டவுன் 78 ஆயிரம் உயிர் இழப்புகளை தடுத்துள்ளது…. மக்களவையில் ஹர்ஷ் வர்தன் தகவல்
ஹர்ஷ் வர்தன்

2020 மார்ச்சில் இருந்ததை காட்டிலும், அர்ப்பணிப்பு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் 36.3 மடங்கும், அர்ப்பணிப்பு ஐ.சி.யூ. படுக்கைகள் 24.6 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நேரத்தில் தேவையான தரங்களுடன் பி.பி.இ. கருவிகள் உற்பத்தி எதுவும் இல்லை. ஆனால் இப்போது நாம் தன்னிறைவு பெற்றுள்ளதோடு, அதை ஏற்றுமதி செய்யும் நிலையிலும் உள்ளோம்.

4 மாத லாக்டவுன் 78 ஆயிரம் உயிர் இழப்புகளை தடுத்துள்ளது…. மக்களவையில் ஹர்ஷ் வர்தன் தகவல்
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்

கடந்த 4 மாத லாக்டவுன் காரணமாக தோரயமாக 14 முதல் 29 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்புகளும், 37 முதல் 78 ஆயிரம் உயிர் இழப்புகளும் தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளை பத்து லட்சம் பேரில் முறையே 3,328 மற்றும் 55ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அளவுக்கு பாதிக்கப்பட்ட மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்த அளவாகும். மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், தெலங்கானா, ஒடிசா, அசாம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்சம் 1 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.