மனைவிக்கு வேலை கொடுங்க! பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி!!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainமனைவிக்கு வேலை கொடுங்க! பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி!! 

ஹாரி- மேகன்
ஹாரி- மேகன்

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் மனைவிக்காக திரைப்பட இயக்குநரிடம் வேலை கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் விலகியதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டத்தை இழந்த ஹாரி- மேகன் தம்பதிகள் தற்போது கனடாவில் வசித்துவருகின்றனர்.

Harry

இந்நிலையில் இளவரசர் ஹாரி, தனது மனைவி மேகனுக்கு வேலை வழங்குமாறு லயன் கிங் படத்தின் இயக்குநரிடம் ஹாரி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் படத்தில் யாருக்காவது பின்னணி குரல் கொடுக்கும் வேலை இருந்தால் மேகனுக்கு தருமாறு ஹாரி கேட்கிறார். பின்னணி குரல் கொடுப்பதில் மேகன் அனுபவம் பெற்றவர் என்றும் ஹாரி வலியுறுத்துகிறார். அவர்களது அருகில் மேகனின் தோழியாகிய பிரபல பாடகி பியான்ஸ் நின்றுக்கொண்டிருந்தார். அவர் ஹாரியின் பேச்சை கேட்க முடியாமல் வருத்ததில் நிற்கிறார். இந்த வீடியோவை பார்த்த அரச குடும்ப உறுப்பினர்கள் கடும் மன வேதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2018 TopTamilNews. All rights reserved.