ஹார்மன் நிறுவனத்தின் புதிய சவுண்ட்பார் மற்றும் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ஹார்மன் நிறுவனத்தின் புதிய சவுண்ட்பார் மற்றும் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: ஹார்மன் நிறுவனத்தின் புதிய சவுண்ட்பார் மற்றும் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹார்மன் நிறுவனத்தின் புதிய சவுண்ட்பார் மற்றும் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி இன்பினிட்டி சோனிக் பி200 சவுண்ட்பார் மற்றும் இன்பினிட்டி கிளைடு 510 ஹெட்போன் ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமேசான் தளம் மற்றும் ஹார்மன் ஆடியோ இந்தியா இணையதளம் ஆகியவற்றில் இந்த சாதனங்களை வாங்க முடியும். இதில் அந்த ஹெட்போன் மாடல் 72 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை கேட்க முடியும். அதேபோல சவுண்ட்பார் சாதனம் 160வாட்ஸ் பவர் அவுட்புட் கொண்டது.

ஹார்மன் நிறுவனத்தின் புதிய சவுண்ட்பார் மற்றும் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

மேலும் சவுண்ட்பார் சாதனம் வயர்லெஸ் சப்-வூபர் மற்றும் மல்ட்டி-கனெக்டிவிட்டி ஆப்ஷன் கொண்டது. இன்பினிட்டி சோனிக் பி200 சவுண்ட்பார் விலை ரூ.17,999 எனவும், இன்பினிட்டி கிளைடு 510 ஹெட்போன் விலை ரூ.3,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொடக்க விலை சலுகையாக முறையே ரூ.7299 மற்றும் ரூ.1699 என சாதனங்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ் போர்ட், யு.எஸ்.பி போர்ட், ப்ளூடூத், ஆப்டிகல் இன்புட் ஆகிய அம்சங்கள் சவுண்ட்பார் சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.