இந்தியாவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் – உற்பத்தி, விற்பனை நிறுத்தம்

இந்தியாவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் – உற்பத்தி, விற்பனை நிறுத்தம்

அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய டுவீலர் விற்பனை சந்தையாக அறியப்படும் இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த ஹார்லி டேவிட்சன், தனக்கென ஒரு இடம் பிடிக்க முடியாமல் திணறி வந்தது.

இந்தியாவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் – உற்பத்தி, விற்பனை நிறுத்தம்

இந்த நிலையில், அமெரிக்கா போன்ற லாபகரமான சந்தையில் தீவிர கவனம் செலுத்தப்போவதாக ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வியூகம் வகுத்து இருந்தது. அதன் படி இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள பாவால் தொழிற்சாலையை ஹார்லி டேவிட்சன் மூடிவிடும் என தெரியவந்துள்ளது. அதே சமயம், குர்கானில் உள்ள அந்நிறுவனத்தின் விற்பனை அலுவலகம் மட்டும் செயல்படும் என்றும் எனினும் அங்கு வர்த்தக நடவடிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் – உற்பத்தி, விற்பனை நிறுத்தம்

பன்னாட்டு நிறுவனங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஹார்லி டேவிட்சனின் அறிவிப்பு அந்த முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்