”ஹார்லி டேவிட்சன் பைக் – விற்பனையில் ஹீரோ நிறுவனம்” !

 

”ஹார்லி டேவிட்சன் பைக் –  விற்பனையில் ஹீரோ நிறுவனம்” !

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

”ஹார்லி டேவிட்சன் பைக் –  விற்பனையில் ஹீரோ நிறுவனம்” !
”ஹார்லி டேவிட்சன் பைக் –  விற்பனையில் ஹீரோ நிறுவனம்” !

அமெரிக்காவின் பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், இந்தியாவில் தொடரும் வாகன விற்பனை சரிவு காரணமாக, இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தப்போவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகளை விற்பனை செய்வதுடன், பைக்குகளின் சர்வீஸ் மற்றும் அதன் உதிரி பாகங்களையும் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் என தெரிகிறது.

”ஹார்லி டேவிட்சன் பைக் –  விற்பனையில் ஹீரோ நிறுவனம்” !

மேலும் இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹார்லி டேவிட்சன் பிராண்டின் கீழ், சில பிரிமீயம் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்யும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக் பிரியர்களுக்கு தித்திப்பான செய்தியாக வந்திருக்கும் இந்த தகவல், இரு நிறுவனங்களுக்கும் ஒரு சிறப்பான வர்த்தக வாய்ப்பையும் ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்த்தமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்