என்னால் தூங்க முடியவில்லை.. குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மாநிலங்களை துணைதலைவர் ஹரிவன்ஷ்

 

என்னால் தூங்க முடியவில்லை.. குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மாநிலங்களை துணைதலைவர் ஹரிவன்ஷ்

கட்டுங்கடங்காத மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கையால் இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை என்று குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களை துணை தலைவர் ஹரிவன்ஷ், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடுக்கு மாநிலங்களை துணை தலைவர் ஹரிவன்ஷ் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் ஹரிவன்ஷ் கூறியிருப்பதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 2 மசோதாக்கள் நிறைவேற்றபோது மாநிலங்களவையில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் எனக்கு வலி, அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தின. இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. அசிங்கமான மற்றும் நல்லநடத்தை இல்லாத முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்னால் தூங்க முடியவில்லை.. குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மாநிலங்களை துணைதலைவர் ஹரிவன்ஷ்
மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ்

அந்த காட்சிகள் இதயத்தையும், மனதையும் தொந்தரவு செய்யக்கூடியவை, ஜனநாயகத்துக்கு அவமானம் தரும் காட்சிகள். நான் ஒரு உள்முக சிந்தனையாளன், ஒரு கிராமத்தை சேர்ந்தவன், இலக்கியம், உணர்வுதிறன் மற்றும் மதிப்புகளில் வேரூன்றியிருக்கிறேன். ஜனநாயகம் என்ற பெயரில் உறுப்பினர்கள் வன்முறை நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். தலைமையில் இருக்கும் நபரை மிரட்டும் முயற்சி இருந்தது.மாநிலங்களவையில் அனைத்து விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டன. விதி புத்தகம் கிழித்து என் மீது வீசப்பட்டது.

என்னால் தூங்க முடியவில்லை.. குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மாநிலங்களை துணைதலைவர் ஹரிவன்ஷ்
மாநிலங்களவையில் விதி புத்தகத்தை கிழிக்கும் உறுப்பினர்

சிலர் நாற்காலியில் வீசினர். இருட்டில் கலங்கரை விளக்குகள் போல், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும் எதிர்கால போக்கை நிறுவனங்கள் (நாடாளுமன்றம்) தீர்மானிக்கின்றன. அதனால்தான் மாநிலங்களவையும், மாநிலங்களவை தலைவர் பதவியும் மிக முக்கியமானவை, புகழ்பெற்றவை,நான் அல்ல. கட்டுகடங்காத விதத்தில் நடந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுய திருத்த உணர்வுக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.