சித்து தனது ஆலோசர்களை நீக்கவில்லை என்றால் நான் செய்வேன்.. ஹரிஷ் ராவத் உறுதி

 

சித்து தனது ஆலோசர்களை நீக்கவில்லை என்றால் நான் செய்வேன்.. ஹரிஷ் ராவத் உறுதி

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து தனது சர்ச்சைக்குரிய ஆலோசகர்களை நீக்கவில்லை என்றால் நான் அதை செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் பியாரே லால் கார்க் மற்றும் மல்விந்தர் சிங் மாலி. மல்விந்தர் சிங் மாலி கடந்த சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில், காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது, இந்தியாவும், பாகிஸ்தானும் அதில் சட்டவிரோதமாக உள்ளது என்று சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்து இருந்தார். மேலும் மற்றொரு பதிவில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்து இருந்தார். சித்துவின் மற்றொரு ஆலோசகர் பியாரே லால் கார்க், பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை கேள்வி எழுப்பினார். இதனையடுத்து சித்துவின் ஆலோசகர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சித்து தனது ஆலோசர்களை நீக்கவில்லை என்றால் நான் செய்வேன்.. ஹரிஷ் ராவத் உறுதி
மல்விந்தர் சிங் மாலி மற்றும் பியாரே லால் கார்க்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சித்துவின் சர்ச்சைக்குரிய ஆலோசகர்கள், முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றப்படுவாரா போன்ற கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். ஹரிஷ் ராவத் கூறியதாவது: சித்துவின் ஆலோசகர்கள் கட்சியால் நியமிக்கப்படவில்லை.

சித்து தனது ஆலோசர்களை நீக்கவில்லை என்றால் நான் செய்வேன்.. ஹரிஷ் ராவத் உறுதி
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

அவர்களை நீக்கும்படி சித்துவிடம் கூறினோம். சித்து அதை செய்யவில்லை என்றால் நான் செய்வேன். கட்சியை சங்கடப்படுத்தும் நபர்கள் எங்களுக்கு வேண்டாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. நாங்கள் அதை பின்பற்றுவோம். கட்சியின் புதிய சட்டப்பேரவை அமர்ந்திருக்கும்பேர்து (வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு) அவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.