உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்

உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்

உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், ஹரிஷ் ராவத் சிலிண்டரை சுமந்தப்படி பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வுககு எதிராக எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்டிலும் காங்கிரசார் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். தேராடூனில் நடந்த அந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத்தும் கலந்து கொண்டார்.

உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

அந்த போராட்டத்தில் ஹரிஷ் ராவத் தனது தோளில் சிலிண்டரை சுமந்தப்படி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 3 மாதங்களில் சமையல் கியாஸ் விலை ரூ.250 வரை உயர்ந்துள்ளது. அதேவேளையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை முன்னோடியில்லாத வகையில் உயர்வு கண்டது. கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்கள் வாயிலாக மட்டும் ரூ.21 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளது.

உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்
ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் ஹரிஷ் ராவத்

அந்த பணம் எங்கு போனது என்று யாருக்கும் தெரியாது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை குறையும் வரை கிராமம் கிராமாக சென்று மக்கள் மத்தியில் இது குறித்து தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அந்த போராட்டத்தில் ஹரிஷ் ராவத் கயிறு கட்டி ஆட்டோ ரிக்ஷாவையும் இழுத்தார்