Home க்ரைம் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி; கண்டுக் கொள்ளாத சீமான் - ஆவேசமடைந்த ஹரிநாடார்!

தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி; கண்டுக் கொள்ளாத சீமான் – ஆவேசமடைந்த ஹரிநாடார்!

நடிகை விஜயலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சினையில் சில தினங்களுக்கு முன் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு கதாநாயகியாகவும் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பெங்களூரைச் சேர்ந்த தமிழ்பெண் தான் இந்த நடிகை விஜயலட்சுமி. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்தபோதுதான் நடிகரும் இயக்குநருமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகாரளித்தார்.

Tamil actress Vijayalakshmi attempts suicide, admitted to hospital ...

அந்தப் புகாரில் `சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதை நம்பி 3 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். பின்னர் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். எனவே சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் லைவ்வில் வந்த நடிகை விஜயலட்சுமி, ஒரு பரபரப்பான ஒரு தகவலைத் தெரிவித்தார். கையில் வைத்திருந்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனத் தெரிவித்தார். லைவ்விலேயே மாத்திரைகளை அவர் சாப்பிட்டார். அதில் சீமான் மீதும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மீதும் நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியிருந்தார். இது என்னுடைய கடைசி வீடியோ என்று கூறியிருந்தார். அதன்பிறகு அந்த வீடியோ லைவ்விலேயே அவர் மயங்கிவிட்டார்.

Actress Vijayalakshmi suicide attempt video going viral in social ...

இந்தக் காட்சிகளைப் பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகை விஜயலட்சுமியின் நலம் விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகை விஜயலட்சுமியின் வீட்டுக்கு  நடிகை காயத்ரி ரகுராம் காரில் சென்றார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த நடிகை விஜயலட்சுமியை மீட்ட நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பிறகு நடிகை விஜயலட்சுமி உடல் நலம் தேறினார். தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Gayathri Raghuram

இதற்கிடையில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரெட் வெங்கடேசன், நடிகை விஜயலட்சுமியைச் சந்தித்து என்ன நடந்தது என்று விசாரித்தார். அவர் கூறிய தகவல்களை வாக்குமூலமாக மாஜிஸ்திரெட் பதிவு செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். குணமடைந்த நடிகை விஜயலட்சுமி இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னைக் காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் நலமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘இந்தப் பிரச்னை இன்று தொடங்கியது அல்ல. சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. சமூக வலைதளத்தில் சீமானால் நடிகை விஜயலட்சுமி பாதிக்கப்பட்ட தகவல்களை விரிவாக கூறி வீடியோ வெளியிட்டதும் நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு பலவகையில் தொல்லைகள், மிரட்டல்களைக் கொடுத்துவந்தனர். அதையெல்லாம் சமாளித்த நடிகை விஜயலட்சுமி, சீமான் திருமணத்தின்போது கடும் ஆட்பேசனையை தெரிவித்தார். ஆனால் அதையும் மீறி அவரின் திருமணம் நடந்தது. தன்னிடம் உள்ள ஒவ்வொரு வீடியோக்களையும் நடிகை விஜயலட்சுமி, சமூகவலைதளத்தில் வெளியிட்டார். சமூகவலைதளத்தில் நடந்த இந்த முட்டல் மோதல் எல்லை மீறியதால் காவல் நிலையத்திலும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். ஆனால் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

நடிகை விஜயலட்சுமி

அதனால்தான் நடிகை விஜயலட்சுமி, சில தினங்களுக்கு முன் சீமான் குறித்த தகவல்களை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவுக்கு பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், மிரட்டும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி அவர்களே நாவை அடக்கி பேசுங்கள்…. இல்லையெனில்…. சீமான் எங்களின் ரத்தம் என்று குறிப்பிட்டிருந்தார். அதனால் மன உளைச்சல் அடைந்த நடிகை விஜயலட்சுமி, ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு செய்ய முயன்றார். நல்லவேளை உடனடியாக அவரைக் காப்பாற்றி விட்டோம். நடிகை விஜயலட்சுமி தரப்பில் உள்ள நியாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் வீடியோவில், `நடிகை விஜயலட்சுமி அவர்களின் கவனத்திற்கு கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி அவர்களே உங்கள் வாழ்க்கையில் நடந்த தனிப்பட்ட சம்பவங்கள் குறித்து வீடியோ பதிவு செய்து வந்தீர்கள். அதை அனைவரும் அறிவோம். சீமானின் தாயாரை இழிவுப்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளைக் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள். அதை வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களுக்கு எப்போதுமே மரியாதை கொடுப்பவர்கள் நாங்கள். அவர்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்பவர்கள் நாங்கள்.

இடைத்தேர்தலில் சீமானை முந்திய ஹரி ...

அதே வேளையில் சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தோடு நீங்கள் தேவையில்லாமல் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறீர்கள். சீமான், சாதாரண மனிதர் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் தமிழர்களுக்கு ஒப்பற்ற தலைவர்தான் சீமான். சீமானைத் தவறான முறையில் விமர்சித்து வருகிறீர்கள். தனிப்பட்ட பிரச்னை என்றால் காவல் துறையில் புகாரளியுங்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். அதை விட்டு சமூகவலைதளங்களில் என்ன வேண்டுமென்றாலும் பேசினால், அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்று கருத வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்  என்னுடைய ரத்தம். என்னுடைய அன்பு சகோதரர். அவரின் தாயாரை பேசுவது எங்களின் தாயாரை பேசுவதற்கு சமம். உங்கள் தாயார் பேசினால் அது எப்படி மனவேதனை தரும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பிரச்னைகள் இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பேச யாருக்கும் உரிமை இல்லை. நடிகை விஜயலட்சுமி அவர்களே நாவை அடக்குங்கள். இல்லையெனில் நாவை அறுத்தெறியும் சூழல் வரும் என எச்சரிக்கையாகவே கூறி கொள்கிறேன். பீப் சாங் பாடலை பாடியதற்கு கொதித்தெளிந்த மாதர்சங்கள் ஏன் இந்தச் சம்பவத்தை கண்டுக்கொள்வதில்லை. சட்டத்தை நாடுங்கள் சட்டம் அவரைக் தண்டிக்கட்டும் ”என்று கூறியிருந்தார்.

நடிகை விஜயலட்சுமியின் வீடியோவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் எந்தவித பதிலும் இல்லை. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

நடிகை விஜயலட்சுமி சம்பவம் குறித்த திருவான்மியூர் போலீஸாரிடம் கேட்டதற்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. விசாரணைக்குப்பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றனர்.

-எஸ்.செல்வம்

Most Popular

செப்டம்பரில் கார் விற்பனை 31 % உயர்வு – மாருதி தகவல்

கடந்த செப்டம்பரில் கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக...

ராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்!

வாணியம்பாடி அருகே சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம்...

’10 நாட்களில் குணமடையும் நோயாளிகள்’ வீடுகளிலேயே சிகிச்சை – சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்!

ஈரோடு மாவட்டம் முழுவதுமாக 520 வீடுகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல...
Do NOT follow this link or you will be banned from the site!