பா.ஜ.க.வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டும்… ஹார்டிக் படேல் ஆவேசம்…

பா.ஜ.க.வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டும்… ஹார்டிக் படேல் ஆவேசம்…

குஜராத்தில் ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹார்டிக் பாண்டியாக கூறியதாவது: கடந்த ஒரு மாத காலமாக பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை செலவிட்டுள்ளார்கள்.

பா.ஜ.க.வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டும்… ஹார்டிக் படேல் ஆவேசம்…

அவர்கள் அந்த பணத்தை வெண்டிலேட்டர் வாங்க செலவிட்டு இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். பணத்தின் மீதான பேராசை காரணமாக, சமானிய மக்களை மோசடி செய்த அவர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அங்கு (பா.ஜ.க.) சென்று இருக்கலாம் என நான் நம்புகிறேன். மக்கள் அவர்களை செருப்புகளால் அடிக்க வேண்டும்.

பா.ஜ.க.வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டும்… ஹார்டிக் படேல் ஆவேசம்…

அவர்கள் ஏன் தேர்தலுக்கு முன்னதாக பதவியை ராஜினாமா செய்தார்கள்? எல்லாவற்றையும் தெரிந்தும் தேர்தல் ஆணையமும் அமைதியாக இருக்கிறது. ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. நாங்கள் 2 ராஜ்ய சபா இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்மாதம் 19ம் தேதியன்று ராஜ்ய சபா தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த சில தினங்களில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.