“இது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு”- அப்பா ஆகப்போவது குறித்து பாண்டியா நெகிழ்ச்சிப்பதிவு!

 

“இது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு”- அப்பா ஆகப்போவது குறித்து பாண்டியா நெகிழ்ச்சிப்பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யா, செர்பிய மாடல் அழகியான நடாசா ஸ்டான்கோவிச்சை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்தார். அப்போது இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தங்கள் திருமண அறிவிப்பை வெளியிட்டனர். இந்த புகைப்படங்கள் பல நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாக இருந்து வந்தன.

“இது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு”- அப்பா ஆகப்போவது குறித்து பாண்டியா நெகிழ்ச்சிப்பதிவு!

இந்நிலையில், பாண்டியா இன்னொரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் தன் காதலி நடாசா கருத்தரித்திருப்பதை உறுதி செய்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பாண்ட்யா தனது காதலியின் வயிற்றை தொடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

“நடாசாவும் நானும் இதுவரை ஒரு மறக்கமுடியாத பயணத்தை பகிர்ந்து கொண்டோம், இப்போது, அது இன்னும் சிறப்பாக இருக்கப் போகிறது. மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய வாழ்க்கையை வர இருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய அடி எடுத்து வைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ”என்று பதிவிட்டுள்ளார்.