Home இந்தியா "இனி ஆட்டாவுக்கு சொல்விங்க டாட்டா" ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட்டுக்குள் பல்லி-உணவு துறை அதிகாரிகள் ரெய்டு ..

“இனி ஆட்டாவுக்கு சொல்விங்க டாட்டா” ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட்டுக்குள் பல்லி-உணவு துறை அதிகாரிகள் ரெய்டு ..

ஒரு நுகர்வோர் வாங்கிய, பிரபலமான ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பல்லி கிடந்ததால் அந்த பகுதி மக்கள் ஆட்டாவில் சமைக்கவே அஞ்சுகிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சென்ற வாரம் குப்தா என்பவர் 5கிலோ ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட் வாங்கிக்கொண்டு போனார் .பிறகு வீட்டுக்கு சென்று அந்த பாக்கெட்டை பிரித்தபோது அதற்குள் ஒரு பல்லி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றார் .

உடனே அவர் நேராக அந்த ஆட்டா பாக்கெட்டை வாங்கிய கடைக்காரரிடம் சென்று இது பற்றி கேட்ட போது அவர் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும்,இதை விநியோகித்த ஏஜென்ட் அருண் என்பவரிடம் சென்று கேளுங்கள் என தட்டி கழித்தார் .அவர் உடனே நேராக ஏஜென்ட் அருணிடம் சென்று கேட்டபோது அதற்கு அவர் முறையாக பதில் கூறவில்லை .


இதனால் குப்தா நேரடியாக உணவு துறை அதிகாரிகளிடம் புகார் தந்தார் .
உடனே உணவு துறை அதிகாரிகள் நேரடியாக அந்த கோதுமை விற்ற கடைக்கும் மற்றும் பல மளிகை கடைகளுக்கும் சென்று தர பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்து சென்றார்கள் .அந்த மாதிரியின் முடிவுகளில் தரம் குறைவாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள் .
இதற்கிடையே அந்த மாவட்டத்தில் பிரபலமான ஆட்டா பாக்கெட்டில் பல்லி கிடந்த விஷயம் அந்த பகுதி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது ,இனி ஆட்டாவுக்கு டாட்டா சொல்லலாமா என்று பலர் யோசிக்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...
Do NOT follow this link or you will be banned from the site!