ரெம்டெசிவிர் அவசரம் என பதிவிட்ட ஹர்பஜன்… கன பொழுதில் உதவி செய்த சோனு சூட்!

 

ரெம்டெசிவிர் அவசரம் என பதிவிட்ட ஹர்பஜன்… கன பொழுதில் உதவி செய்த சோனு சூட்!

பாலிவுட்டில் பிரபலமானவர் வில்லன் நடிகர் சோனு சூட். இவர் நிஜத்தில் ஹீரோவாக செயல்பட்டு வருகிறார். உதவி என்று வருபவர்களுக்குத் தட்டாமல் செய்வார். இந்தக் கொரோனா காலம் ஆரம்பமானதிலிருந்தே இவர் ஏராளமானோருக்கு உதவி செய்து வருகிறார். கடந்த வருடம் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை விமானம் மூலம் மீட்டார். இதேபோல பல பல உதவிகளைச் செய்துவந்தார்.

ரெம்டெசிவிர் அவசரம் என பதிவிட்ட ஹர்பஜன்… கன பொழுதில் உதவி செய்த சோனு சூட்!

தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருவதால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் பல உயிர்கள் பறிபோகின்றன. ரெம்டெசிவிர் வாங்க இரவுபகலாக கால் கடுக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முன்பை விட களத்தில் வேகமாக இயங்கிவருகிறார் சோனு சூட்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் ட்விட்டரில், கர்நாடகா மாநிலத்தில் ஒருவருக்கு மிக அவசரமாக ரெம்டெசிவிர் மருந்து வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதனைக் கவனித்த சோனு சூட், ரெம்டெசிவிர் மருந்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் மருந்து சீக்கிரம் டெலிவரி ஆகிவிடும் என்றும் ஹர்பஜனுக்கு ட்விட்டரில் பதிலளித்தார். அதற்கு ஹர்பஜன் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்தார். சமீபத்தில் சுரேஷ் ரெய்னா ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு சோனுவிடம் உதவி கோரினார். அவரது கோரிக்கையும் சோனு சூட் நிறைவேற்றினார்.