#HappyDhanteras முதல்நாள் தீபாவளி கொண்டாட்டம்!

 

#HappyDhanteras முதல்நாள் தீபாவளி கொண்டாட்டம்!

தமிழகத்தில் ஒருநாள் கொண்டாட்டமாக இருக்கும் தீபாவளி, வடமாநிலங்களில் ஐந்து நாள் கொண்டாட்டமாக இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டம் கூட தமிழகத்தில் நான்கு நாள் கொண்டாட்டம்தான். ஆனால், ஐந்த நாள் கொண்ட்டாட்டமாக அமைந்திருக்கிறது வடமாநிலத்து மக்களுக்கு.

#HappyDhanteras முதல்நாள் தீபாவளி கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் நாளினை வடமாநிலத்தவர்கள் ‘சின்ன தீபாவளி’ என்று கொண்டாடுகிறார்கள். மறுநாள் அமாவாசை அன்றுதான்பெரிய தீபாவளி கொண்டாட்டம். நான்காவது நாள் கோவர்த்தன் பூஜை என்றும், ஐந்தாவது நாள் பய்யா தோஜ் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

சின்ன தீபாவளிக்கு முதல் நாள்தான் தந்தேரஸ் என்று கொண்டாடுகிறார்கள். அதுதான் தீபாவளி பண்டிகையின் முதல்நாள் திருவிழா. இந்த முதல் நாள் திருவிழாவை உலோகத்திருவிழா என்று கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை. தங்கம் வாங்க முடியாதவர்கள் பாத்திரங்களை வாங்குகின்றனர்.

தன்தேரஸ் நாளில் லட்சுமிக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதனால் புது ஆடைகளும், நகை, பாத்திரங்களையும் வாங்கிய மக்கள், விடிய விடிய தங்கம் வாங்கியதால் நகைக்களை திண்டாடியிருக்கிறது. முதல் நாள் திருவிழாவினை #HappyDhanteras என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள்.