பா.ஜ.க-வில் இணைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளேன்! – எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி

பா.ஜ.க-வில் இணைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளேன்! – எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி

பா.ஜ.க-வில இணைந்தது புத்திசாலித்தனமான முடிவு என்றும், பா.ஜ.க-வில் இணைந்ததன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வில் இணைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளேன்! – எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணனா. கர்நாடக முதல்வராக, மத்திய அமைச்சராக, ஆளுநராக பல்வேறு பதவிகளில் அவரை காங்கிரஸ் கட்சி நியமித்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர் பா.ஜ.க-வுக்கு தாவினார்.

பா.ஜ.க-வில் இணைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளேன்! – எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், “ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஜனநாயகம் குறைபாடுகள் உள்ளன. இந்த உள்கட்சி ஜனநாயக பிரச்னை காந்தி, நேரு, நேதாஜி காலத்திலேயே இருந்தது. காங்கிரஸ் கட்சி சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக மாறாமல் போய்விட்டது. இளைஞர்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகள், கருத்துக்கள், மன வருத்தங்கள் போன்றவை அதிகரிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இது ஒட்டுமொத்த சேதத்தை ஏற்படுத்திவிடும்.

பா.ஜ.க-வில் இணைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளேன்! – எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி
ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் பா.ஜ.க மேலும் பலம் பெறும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறும். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். 45 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தேன். இது சரியான, புத்திசாலித்தனமான முடிவாக நான் பார்க்கிறேன். இதன் மூலம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதன் மூலம் மோடி நம்மை எல்லாம் பெருமைப்படுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பணியில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.