• February
    22
    Saturday

Main Area

Main



'முத்த தினம்...' எங்கே முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.. தெரிந்து கொண்டு அசத்துங்கள்!

முத்த தினம் 2020
முத்த தினம் 2020

காதலை வெளிப்படுத்த முத்தம் என்ற ஒன்றை மொழி போதுமானதாக உள்ளது எனலாம். முத்தத்தின் போது  நம் உதடுகள் மட்டுமல்ல நம் உள்ளங்களும் சங்கமிக்கிறது. காதலர்கள் மட்டும் தான் முத்தத்திற்கு உரியவர்கள் என்பது கிடையாது. நம் அன்பை முத்தத்தின் மூலம் நம் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் கூட வெளிப்படுத்தலாம். அம்மாவின் அன்பு முத்தம், அப்பாவின் பாசமுத்தம், சகோதரரின் நேசமுத்தம், துணையின் காதல் முத்தம் என ன் முத்தங்கள்  உறவுகளுக்கு ஏற்ப மாறுமே தவிர  அதன் உணர்வும், அன்பும் என்றுமே மாறாது.  

 

 

ttn

இருப்பினும் காதலர் வாரத்தில் இன்று முத்த தினம் என்பதால் அதை பற்றிய சிறிய தொகுப்பினை இங்கு காணலாம். உங்கள் துணைக்கு / காதலிக்கு நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்கள் என்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். அதில் மென்மை  இருக்க வேண்டுமே தவிர வன்முறை என்பது கூடாது. காதலியிடம் நீங்கள் ரொமான்ஸாகப் பேசிக் கொண்டே இருக்கும் போது  கண்டிப்பாக அவர்கள் உங்களிடம் மென்மையான முத்தத்தை  எதிர்பார்ப்பார்கள். இருப்பினும்  முத்தம் எங்கெங்கு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு, முத்தம் கொடுங்கள்.

உதட்டு முத்தம்:

 

kiss

உதட்டில் முத்தம் கொடுப்பது அதிகப்படியான காதலை வெளிப்படுத்தும் உணர்வுகள் மேலோங்கும். இதற்கு நான் உன்னை உயிரைவிடவும் மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தம். 

கைகளில் முத்தம்:

ttn

இது மரியாதை நிமித்தமாகக் கொடுப்பது. இந்த முத்தத்தை நண்பர்கள், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் வயதில் சிறியவர்களுக்குக் கொடுப்பார்கள்.

கண்ணைத் திறந்து கொண்டு முத்தம் தருதல்:

ttn

கண்களைத் திறந்து கொண்டே உங்கள் காதலி முத்தம் கொடுத்தால், உங்கள்  இணையை நீங்கள் இன்னும் அதிகப்படியாகச் சந்தோஷமாக வைத்துக்கொள்வீர்கள் என்று அர்த்தம். 

கண்களை மூடி கொடுத்தல்:

ttn

கண்களை இருவரும் மூடிக்கொண்டு கொடுக்கும் முத்தமானது அந்த நிமிஷத்தையும், தருணத்தையும் இருவரும்  ரசிக்கிறார்கள் என்று பொருள்படும். 

கன்னத்தில்  முத்தம்:

ttn

 நாம் இருவரும் நல்ல காதலர்கள் என்பதையும் தாண்டி, இதுவரை உன்னுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்வதாக கருதப்படுகிறது. 

கழுத்து முத்தம்:

ttn

கழுத்து முத்தம் அதிக ரொமான்ஸ் கொண்டதாக இருக்கும். அந்த முத்தத்துக்கு, நீ எனக்கு வேண்டுமென்று அர்த்தம்.

நெற்றி முத்தம்:

ttn

இது பொதுவான ஒன்று. அனைத்து வயதினரும் இந்த முத்தத்தைப் பரிமாறிக் கொள்வார்கள். வாழ்நாள் முழுவதும் உன்னுடைய அன்பு எனக்கு வேண்டுமென்று அர்த்தம்

கண்களில் முத்தம்:

ttn

இது நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறுவது போலவும் அன்பின் மிகுதியாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுக்கப்படுவதாகவும் உள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.