மோடிஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் : ராகுல் காந்தி ட்வீட்!

 

மோடிஜி-க்கு  பிறந்தநாள் வாழ்த்துகள் : ராகுல் காந்தி ட்வீட்!

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடிஜி-க்கு  பிறந்தநாள் வாழ்த்துகள் : ராகுல் காந்தி ட்வீட்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் நாட்டில் உள்ள 70 முக்கிய நகரங்களில் அவரது பிறந்த நாளை கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது . 2014 பிரதமராக பதவியேற்ற மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சாமானிய தொண்டனாக இருந்து பின் முதல்வர் ஆகி, தற்போது இரண்டு முறை நாட்டின் பிரதமராக வீற்றிருக்கும் மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , திரைப்படங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடிஜி-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.