“நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” : தொலைபேசியில் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

 

“நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” : தொலைபேசியில் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” : தொலைபேசியில் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த் இன்று 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிய தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ரசிகர்கள் குவிந்து அவரது தரிசனத்திற்காக காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்! என்று பதிவிட்டுள்ளார்.