சந்தோஷங்கள் மலர திருவோண விரதம்!

 

சந்தோஷங்கள் மலர திருவோண விரதம்!

திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருமலையில் பெருமாளின் பிரம்மோற்சவத்தை பிரம்மனே கோவிலின் அருகில் நடத்துவதாக ஐதீகம். கோவிலின் அருகில் கூடும் கூட்டம் தலையா கடல் அலையா என்று சொல்லும்படி பக்தர்கள் கூடி ‘கோவிந்தா கோவிந்தா’ என கோவிந்தா நாமத்தை அதிர வைக்கும் படி கோஷமிட ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி, ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார்.

சந்தோஷங்கள் மலர திருவோண விரதம்!

வைகுண்டம் பூமிக்கு வந்ததோ என பக்தர்கள் மகிழ்வார்கள். பெரிய திருவோணம் என்பது புரட்டாசியில் வரும் திருவோணம். திருமால் ஓணத்தில் அவதரித்தாராம். ஆகவே ‘ஓணத்தான்’ என்பார்கள். இவ்வளவு சிறப்புமிக்க திருவோண விரதத்தை, பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதத்தில் மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும். இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

சந்தோஷங்கள் மலர திருவோண விரதம்!


திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாலின் அருள் பெருங்கள். ஓம் நமோ நாராயணா!

சந்தோஷங்கள் மலர திருவோண விரதம்!
  • வித்யா ராஜா