கர்நாடகாவில் ரூ.1,200 கோடி செலவில் உலகிலேயே உயரமான ஹனுமான் சிலை… ஹனுமத் ஜனம்பூமி டிரஸ்ட் தகவல்

கர்நாடகாவில் ரூ.1,200 கோடி செலவில் உலகிலேயே உயரமான ஹனுமான் சிலை… ஹனுமத் ஜனம்பூமி டிரஸ்ட் தகவல்

கர்நாடகாவில் ரூ.1,200 கோடி செலவில் உலகிலேயே உயரமான ஹனுமான் சிலை நிறுவப்பட உள்ளதாக ஹனுமத் ஜனம்பூமி தீர்த்த சேஷ்த்ரா டிரஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பம்பபூர் கிஷ்கிந்தா இறைவன் ஹனுமான் பிறந்த இடம் என்று இந்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அங்கு உலகிலேயே மிக உயரமான ஹனுமான் சிலையை நிறுவ ஹனுமத் ஜனம்பூமி தீர்த்த சேஷ்த்ரா டிரஸ்ட் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அயோத்தியில் அந்த டிரஸ்டின் தலைவர் சுவாமி கோவிந்த் ஆனந்த் சரஸ்வதி கூறியதாவது:

கர்நாடகாவில் ரூ.1,200 கோடி செலவில் உலகிலேயே உயரமான ஹனுமான் சிலை… ஹனுமத் ஜனம்பூமி டிரஸ்ட் தகவல்
ஹனுமான் சிலை மாதிரி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஹனுமான் பிறந்த இடமான பம்பபூர் கிஷ்கிந்தாவில் ஹனுமான் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை உலகிலேயே உள்ள மிக உயரமான தெய்வ சிலையாக இருக்கும். இந்த சிலை 215 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். சிலை அமைப்பதற்காக ரூ.1,200 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ரூ.1,200 கோடி செலவில் உலகிலேயே உயரமான ஹனுமான் சிலை… ஹனுமத் ஜனம்பூமி டிரஸ்ட் தகவல்
சுவாமி கோவிந்த் ஆனந்த் சரஸ்வதி

இதற்கான நிதியை நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி திரட்டப்படும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் ராம் ஜென்மபூமிக்கு ரூ.2 கோடி செலவில் 80 அடி ரதம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.