அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீங்களும் தரிசனம் செய்யலாம்!

அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீங்களும் தரிசனம் செய்யலாம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்ய முன்பதிவு தொடங்கியுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆஞ்சநேயர் கோயில் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். அந்தளவுக்கு பிரசித்தி பெற்ற ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஞானசக்தியின் அம்சமாக அனுமன் உள்ளார். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலை பீடத்தில் இருந்து 22 அடியும் பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட இந்த சிலையில் அனுமன் கைகூப்பிய நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீங்களும் தரிசனம் செய்யலாம்!

இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர்/ அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற13 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீங்களும் தரிசனம் செய்யலாம்!

இந்நிலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. http://namakkalnarasimhaswamianjaneyartemple.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.