அனுமன் ஜெயந்தி – ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

 

அனுமன் ஜெயந்தி – ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தியை ஒட்டி அதிகாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. கொரோனா காரணமாக நடப்பாண்டு சுவாமி திரு வீதிஉலா, தேர் இழுத்தல் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அனுமன் ஜெயந்தி – ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

இதனையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமரை வழிபட்டு சென்றனர். இதேபோல், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள கோட்டைபெருமாள் கோவில் ஆஞ்சநேயர், கள்ளுகடைமேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், ரெயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி, பொதுமக்கள் திரளாக தரிசனம் செய்தனர்.