மாற்றுத் திறனாளிகள் இந்த தேதி வரை பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு அரசாணை

 

மாற்றுத் திறனாளிகள் இந்த தேதி வரை பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறைந்தால் தான் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பல நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதே போல மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் இந்த தேதி வரை பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு அரசாணை

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் வரும் 31 ஆம் தேதி வரை பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது பேருந்து சேவை இயக்கப்படாததால் மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் பணிக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.